
மாதவிடாய் பிரச்னைகளுக்கு பலவிதமான மாத்திரைகளும் சிகிச்சைகளும் செய்தும் பலன் இன்றி பெண்கள் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு உடல் மன வருத்தத்தில் நொந்து போவார்கள். இதற்கு சரியான தீர்வு வீட்டிலேயே உள்ளது. கருஞ்சீரகம் எனும் அருமருந்து தான் அது. ஆங்கிலத்தில் இதனை Cumin Seeds அல்லது Black seed என்பார்கள். இதன் மருத்துவ பெயர் Nigella Sativa. கருஞ்சீரகத்தின் தாயகம் தென் ஐரோப்பியா, தெற்கு மற்றும் தென் மேற்கு ஆசியப் பகுதிகள்.
கருஞ்சீரகம் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது என்பது பலருக்குத் தெரியாது. பீரியட்ஸ் பிரச்னையால் அவதியுறும் பெண்கள் தினமும் உணவில் கருஞ்சீரகத்தைச் சேர்த்து வந்தால் சில மாதங்களில் அப்பிரச்னை சரியாகிவிடும்.
கருஞ்சீரகத்துள்ள MRSA (Methicillin Resistnat Staphylococcus aurous) எனும் வேதிப்பொருள் உள்ளது, கருஞ்சீரகம் ஒரு சிறந்த ஆண்டி ஆக்ஸிடெண்டாக செயல்படுகிறது. உடலில் சேர்ந்துள்ள நச்சுப் பொருட்களை அகற்றக் கூடிய தன்மையுடையது.
கருஞ்சீரகத்தை தேன் விட்டு அரைத்து பிரசவித்த பின் ஏற்படும் வலிக்குப்பூசிட வலி மாறும்.
கருஞ்சீரகத்தை அரைத்து தேமல் மேல் பூசி வர தேமல் சிறிது சிறிதாக மாறும்.
ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகத்தை எடுத்து நன்றாகப் பொடி செய்து அதனுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் கலந்து சூடு படுத்தி இரண்டு துளி மூக்கில் ஊற்றினால் மூக்கடைப்பு நீங்கும். அடிக்கடி சளித் தொல்லையால் பாதிக்கப்படுபவர்கள் கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊற வைத்துப் பிறகு மூக்கில் இரண்டு அல்லது மூன்று சொட்டுகள் விட்டால் ஜலதோஷத்துக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.
கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் சிறுநீரக கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும்.
கருஞ்சீரகத்தைக் வினிகரில் வேக வைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும். பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்
சிறிதளவு கீழாநெல்லி இலைகளுடன் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்து கொஞ்சம் பால் சேர்த்து அரைத்து பின் இதை ஒரு கப் பாலில் கலந்து காலை உணவுக்கு அரை மணி நேரம் பின் மற்றும் மாலை நேரம் பருகி வர மஞ்சள் காமாலை குணமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.